இராசிகள், Zodiac Constellations
23-04-2024 by R. SENTHILKUMAR M.A. TAMIL

இராசிகள், Zodiac Constellations

இராசிகள்: இராசி என்பது இரவு சித்திரம்.

வானத்தில் உள்ள விண்மீன் கூட்டங்களின் தெகுப்பு விண்மீன் மண்டலம் (அ) Constellations எனப்படும்.

வான் மண்டலம்

வடக்கில் 36  விண்மீன் மண்டலங்கள்

தெற்கில் 52 விண்மீன் மண்டலங்கள்

மொத்தம்: 88 விண்மீன் மண்டலங்கள் உள்ளது.

இதில் சூரியகிரகணபாதைக்கு சராசரி 9° பாகை வடக்கு, தெற்கில் அமைந்துஉள்ள விண்மீன் கூட்டங்களின் இரவு சித்திரம் இராசி மண்டலம் (அ) Zodiac எனப்படும்.

வான் மண்டலம் 360° பாகைகள் கொண்டது. ஒவ்வொரு இராசி மண்டலத்திற்கு 30° பாகைகள் அடிப்படையில் 12 இராசி மண்டலத்தை சம பகுதியாக பிரித்துள்ளனர்.

இராசி வெண்பா:

பாடியவர்: வித்வசிரோன்மணி  காளமேகப் புலவர்

பகருங்கான் மேடமிடபம் மிதுனங் கரக்க

டகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் – சிகந்த

நுசுமகரக் கும்பமீனம் பன்னி ரண்டும்

வரையறு மிராசி வளம் (39 )

பொருள்: பகருங்கால் மேடம், இடபம், மிதுனம், கற்கடகம், சிங்கம், கன்னி, துலாம், விர்ச்சிகம், தநுசு, மகரம், கும்பம், மீனம். பன்னிரண்டும் வரையறும் இராசி வளம்.

ராசியை வானத்தில் பார்த்து காலத்திற்கு ஏற்றால் போல்  ராசி மண்டலத்தை அமைக்க வேண்டும். தமிழ் சூரிய நாட்காட்டி  தற்பொழுது மீன இராசியே முதல் ராசியாக கொண்டு கணக்குக்கிடபடுகிறது.

https://www.tamilsuncalendar.com/home

 

நன்றி வணக்கம்.

வாழ்க  வையகம்...  வாழ்க  தமிழ்...

இப்படிக்கு உங்கள் அன்புள்ள

இரா. செந்தில்குமார்.