சந்திர  நாள் கணிதம், திதிகள்
02-04-2024 by R. SENTHILKUMAR M.A. TAMIL

சந்திர  நாள் கணிதம், திதிகள்

தமிழ் சூரிய நாட்காட்டி

சந்திர  நாள் கணிதம்

சூரியனிடமிருந்து சந்திரன் விலகிச்  செல்லும்  தூரத்தை  Elongation - கோள்களின் விலகல்  12° அடிப்படையாகக் கொண்டு சந்திர நாட்கள்  (திதி) துவங்குகின்றது.

நூல்: புறநானூறு, பாடல் எண் : 27. பாடல் வரிகள்: 11 – 15.

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.

தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியா தோரையும், அறியக் காட்டித்,
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,...

 

என்னும் சங்க பாடல்,

சந்திரன் தேய்தலும் வளர்தலும், இறத்தலும் பிறத்தலும்

இயற்கை என்னும் உண்மை தெரியாதவர்களுக்குத் தெரியும்படி

நிலாத்தெய்வம் உலகிற்க்கு காட்டிக்கொண்டிருக்கிறது.

இதில் தேய்தல் என்பது தேய்பிறையும்,

பெருகல் என்பது வளர்பிறையும்

மாய்தல் என்பது இருள்நிலாவையும்

பிறத்தல் என்பது புது நிலாவையும் குறிக்கும்.

தமிழ் சூரிய நாட்காட்டி

சந்திர  நாள் வாய்பாடு

சூரிய சந்திர கோள்களின் விலகல் 12° (Elongation) கொண்டு சந்திர நாள் வாய்பாடு.

கிழக்கு

மேற்கு

இருள்நிலா தொடக்கம்

180°

முழுநிலா தொடக்கம்

12° 

1ம் வளர்பிறை தொடக்கம்

168°

1ம் தேய்பிறை தொடக்கம்

24°

2ம் வளர்பிறை தொடக்கம்

156°

2ம் தேய்பிறை தொடக்கம்

36°

3ம் வளர்பிறை தொடக்கம்

144°

3ம் தேய்பிறை தொடக்கம்

48°

4ம் வளர்பிறை தொடக்கம்

132°

4ம் தேய்பிறை தொடக்கம்

60°

5ம் வளர்பிறை தொடக்கம்

120°

5ம் தேய்பிறை தொடக்கம்

72°

6ம் வளர்பிறை தொடக்கம்

108°

6ம் தேய்பிறை தொடக்கம்

84°

7ம் வளர்பிறை தொடக்கம்

96°

7ம் தேய்பிறை தொடக்கம்

96°

8ம் வளர்பிறை தொடக்கம்

84°

8ம் தேய்பிறை தொடக்கம்

108°

9ம் வளர்பிறை தொடக்கம்

72°

9ம் தேய்பிறை தொடக்கம்

120°

10ம் வளர்பிறை தொடக்கம்

60°

10ம் தேய்பிறை தொடக்கம்

132°

11ம் வளர்பிறை தொடக்கம்

48°

11ம் தேய்பிறை தொடக்கம்

144°

12ம் வளர்பிறை தொடக்கம்

36°

12ம் தேய்பிறை தொடக்கம்

156°

13ம்   வளர்பிறை தொடக்கம்

24°

13ம் தேய்பிறை தொடக்கம்

168°

14ம்   வளர்பிறை தொடக்கம்

12°

14ம் தேய்பிறை தொடக்கம்

 

 

 

 

 

 

நாம் பயன்படுத்தும் நாட்காட்டி நிராயன முறைபடி கணிக்கப்படுகிறது. இதனால் சூரிய, சந்திர கோள்களின் விலகல்  12° சரியாக அமைவதில்லை. சந்திரனின் ஒளி அளவிற்கும் (illumination) பொருந்துவதில்லை. சந்திரநாட்கள் (திதிகள்) துவங்கும் நேரம் மாறி வருகின்றது.

 

தமிழ் சூரிய நாட்காட்டி சாயன முறைபடி கணிக்கப்படுகிறது. இதனால் சூரிய, சந்திர கோள்களின் விலகல்  12° சரியாக அமைகின்றது. சந்திரனின் ஒளி அளவிற்கும் (illumination) பொருந்துகின்றது. சந்திரநாட்கள் (திதிகள்) துவங்கும் நேரம் சரியாக வருகின்றது.

 

நன்றி வணக்கம்.

வாழ்க  வையகம்...  வாழ்க  தமிழ்...

இப்படிக்கு உங்கள் அன்புள்ளஇரா. செந்தில்குமார்