தமிழர்களின் வானியல் அறிவு
வணக்கம். வாழ்க தமிழ்...வாழ்க வையகம்...
தமிழ் சூரிய நாட்காட்டி
தமிழர்களின் வானியல் அறிவு, நவீன அறிவியல் அடிப்படையில்
உருவாக்கப்பட்ட தமிழ் சூரிய நாள்காட்டி. இதனால்
சூரியன், சந்திரன், நட்சத்திர இயக்கங்கள், பருவநிலை, வானிலைகளை தமிழை முதன்மையாக கொண்டு அறிந்து கொள்ளலாம்.
நெடுநல்வாடை 73-78
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்
பொருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து.
பொருளுரை: திசைகளிலே விரிந்த கதிர்களைப் பரப்பிய அகன்ற இடத்தையுடைய கதிரவன், இரண்டு கோல்கள் நடும்பொழுது நிழல் எந்தப் பக்கமும் சாயாத, மேற்குத் திசையில் எழுகின்ற உச்சிப்பொழுதில், சித்திரைத் திங்களின் நடுப்பகல் நேரத்தில், நூலைக் கற்று அறிந்தவர்கள் நுணுக்கத்துடன் கயிற்றினை இட்டு, திசைகளை நோக்கி, கடவுளை வணங்கி, புகழ்பெற்ற மன்னனுக்குப் பொருத்தமாக அரண்மனையைக் கட்டி அறைகளைக் வகைப்படுத்தினர்.
நெடுநல்வாடையில் அமைந்த இப் சங்க பாடல் மூலம். தமிழர்களின் வானியல் அறிவு, வாழ்வியலோடு இணைந்துள்ளது என்று அறிய முடிகின்றது.
இதை போல் தமிழில் உள்ள வானியல் கருத்துகளை தமிழ் சூரிய நாட்காட்டி மூலம் வெளிபடுத்து வதில் பெரும் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்து கொள்கிறான்.
நன்றி...வணக்கம். வாழ்க வையகம்... வாழ்க தமிழ்...