தமிழரின் பகல் கணிதம்
23-02-2024 by R. SENTHILKUMAR M.A. TAMIL

தமிழரின் பகல் கணிதம்

 

வணக்கம். வாழ்க  வையகம்...  வாழ்க  தமிழ்...

தமிழரின் பகல் கணிதம்

பண்டைய தமிழரின் வானியல் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்து. அதில் பகல்30, இரவு30 நாழிகைகள் கொண்டது ஒரு நாள்.

சூரிய உதயம் முதல் மறையும் வரை உள்ள பகல் நேரத்தை அகசு என பெயரிட்டனர்.

வருடத்தில் சில நாள் பகல் இரவு நேரம் சமமாகவும், சில நாள் நீண்ட பகல் நேரமாகவும். சில நாள் நீண்ட இரவு நேரமாகவும் இருக்கும். என்பதை நம் முன்னோர்கள் அறிவியல் படி முதன் முதலில் உலகிற்கு கூறினர்.

நூல்: பெரிய மனையடி சாஸ்திர மென்னும் சிற்ப சாஸ்திரக் களஞ்சியம்.

ஆசிரியர்: காசிபமுனிவர் திதி மகன் தமிழ் தேவதச்சன் மாமுனிவர் யன்.

புத்தகம்: மதுரை. தமிழ்வித்துவானும் கணித ஜோதிடருமாகிய  திரு. த. குப்புசாமி ஐயா அவர்கள். (1924)

 

தமிழ் தேவதச்சன் மாமுனிவர் யன்.

பகல் கணக்கு

சித்திரையு மைப்பசியுஞ் சீரொக்குஞ் சித்திரைவிட்

டைப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் ஐப்பசிக்கும்

பின்னைந்து மாசம் பிசகாமல் ராவேறும்

மின்னே விடுபூ முடி.  (பாடல் எண்: 281)

சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் 30   இரவு 30 நாழிகைகள் சமமாக இருக்கும்.

0° சூரியன் Mar-20ம் நாள் சித்திரை மாதம் முதல் நாள் வசந்த காலசமநாள் Vernal Equinox.

180° சூரியன் Sep-23ம் நாள் ஐப்பசி மாதம் முதல் நாள் இலைவுதிர் காலசமநாள் – Autumnal Equinox.   

ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நேரம் அதிகமாக இருக்கும். இதில்

90° சூரியன் June-21ம் நாள் ஆடி மாதம் முதல் நாள் – நீண்ட பகல் நேரம் கொண்ட நாள் சூரியன் தென் திசையை நோக்கி பயணிக்கும் தென் செலவு நாள். தக்ஷிணாயனா கால தெடக்கம்.        வெப்பகாலக்கதிர்திருப்பம் – Summer Solstice.

ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நேரம் அதிகமாக இருக்கும். இதில்

270° சூரியன் Dec-22ம் நாள் தை மாதம் முதல் நாள் – நீண்ட இரவு நேரம் கொண்ட நாள் சூரியன் வட திசையை நோக்கி பயணிக்கும் வட செலவு நாள். உத்தராயண கால தெடக்கம். குளிர்காலக்கதிர்திருப்பம் – Winter Solstice எனப்படும்.

 

பாடலின் கடைசி வரி ” வி டு பூ மு டி ” மிக முக்கியமான வரியாகும். இந்த வரியினை வாக்கிய கணித முறை படி வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும். ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 நாழிகை கால அளவு கொடுக்கபடும்.

வி – டி – த  ¾  நாழிகை  மு – டு – வ ¼ நாழிகை   பூ- கஇ – 1 ½  நாழிகை

சராசரி மாதத்துப் பகல் நாழிகை.

 

மாதம்

தமிழ் எண்

நாழிகை

பகல் நிமிடம் அதிகம்

மாதம்

தமிழ்

எண்

நாழிகை

இரவு நிமிடம் அதிகம்

சித்திரை

௩௰

30

சமநாள்

ஐப்பசி

௩௰

30

சமநாள்

வைகாசி

௩௰

30. ¾

18 நிமிடம்

கார்த்திகை

௨௯

29. 1/4

18 நிமிடம்

ஆனி

௩௧

31. ¼

30 நிமிடம்

மார்கழி

௨௮

28. 3/4

30 நிமிடம்

ஆடி

௩௧

31.1/2

36 நிமிடம்

தை

௨௮

28. 1/2

36 நிமிடம்

ஆவணி

௩௧

31. ¼

30 நிமிடம்

மாசி

௨௮

28. 3/4

30 நிமிடம்

புரட்டாசி

௩௰

30. ¾

18 நிமிடம்

பங்குனி

௨௯

29. 1/4

18 நிமிடம்

 

 

அகசு கணக்கு

மாதத்துப் பகல் நேரம் – இடம்: குன்னூர்

தமிழ்

மாதங்கள்

சூரிய பாகை

 

நாட்கள்

சூரிய உதயம் நேரம்

காலை

சூரிய மறைவு நேரம் மாலை

பகல் நேரம்

மணி / நிமிடம்

பகல் அதிக நேரம்

நிமிடம்

சித்திரை

(சராசரி)

 

20.3.2024

வசந்தகால சமநாள்

Vernal Equinox

6:29

6:29

12:00

 

00

வைகாசி 1 நாள்

30°

 

20.4.2024

6:09

6:30

12:21

21 நிமிடம்

ஆனி 1 நாள்

60°

 

21.5.2024

5:59

6:36

12:37

37 நிமிடம்

ஆடி 1 நாள்

90°

 

21.6.2024

அதிக பகல் நேரம் கொண்ட  நாள்.

Summer Solstice.

6:01

6:44

12:43

43 நிமிடம்

ஆவணி 1 நாள்

120°

 

23.7.2024

6:09

6:46

12:37

37 நிமிடம்

புரட்டாசி 1 நாள்

150°

 

23.8.2024

6:13

6:34

12:21

21 நிமிடம்

தமிழ்

மாதங்கள்

சூரிய பாகை

 

நாட்கள்

சூரிய உதயம் நேரம்

காலை

சூரிய மறைவு நேரம் மாலை

பகல் நேரம்

மணி / நிமிடம்

இரவு அதிக நேரம்

நிமிடம்

ஐப்பசி 1 நாள்

180°

 

23.09.2024

குளிர்கால சமநாள்   Autumnal Equinox.  

6:12

6:12

12:00

00

 

கார்த்திகை 1 நாள்

210°

 

23.10.2024

6:13

5:56

11:43

17 நிமிடம்

மார்கழி 1 நாள்

240°

 

22.11.2024

6:23

5:51

11:28

32 நிமிடம்

தை 1 நாள்

270°

 

22.12.2024

அதிக இரவு நேரம் கொண்ட  நாள்.     Winter Solstice 

6:38

6:00

11:22

 

38 நிமிடம்

மாசி 1 நாள்

300°

 

20.01.2025

6:48

6:16

11:28

32 நிமிடம்

பங்குனி 1 நாள்

330°

 

19.02.2025

6:43

6:26

11:43

17 நிமிடம்

 

சித்திரை மாதம் சூரியனின் 0° பாகையை கொண்டு கணக்கிடப்படுகிறது.

இதன் அடிப்படையில் தமிழ் சூரியநாட்காட்டி சித்திரை முதல் நாள் மார்ச் 20ம் தேதி ஆகும்.

நன்றி, வணக்கம்.

வாழ்க  வையகம்...  வாழ்க  தமிழ்...

இப்படிக்கு உங்கள் அன்புள்ள

இரா. செந்தில்குமார். 

தமிழ் சூரிய நாட்காட்டி.