mamuni mayan

தமிழ் சூரிய நாள்காட்டி (நிராயன முறை)

வணக்கம். வாழ்க வையகம்... வாழ்க தமிழ்...

தமிழர்களின் வானியல் அறிவு, நவீன அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ் சூரிய நாள்காட்டி. இதனால் சூரியன், சந்திரன், நட்சத்திர இயக்கங்கள், பருவநிலை, வானிலைகளை தமிழை முதன்மையாக கொண்டு அறிந்து கொள்ளலாம்.

சூரியன் வடக்கு நோக்கி ஏறு முகமாக செல்லும் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் வட செலவு காலமாகும். இக்காலங்களில் வெப்பகாற்று, சூடு, சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

தமிழர்களின் புத்தாண்டு சூரியன் ஏறுமுகமாக பயணிக்கும், முதல் மாதம் தை, வடக்கு நோக்கி மகர (கடல்குதிரை) இராசியில் பயணிக்கும் முதல் நாள் தை பொங்கல் தமிழ் புத்தாண்டு.

சூரியன் தெற்கு நோக்கி இறங்கு முகமாக செல்லும் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்கள் தென் செலவு காலமாகும். இக்காலங்களில் காற்று, மழை, குளிர், நீரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். சூரிய வெப்பம் குறைவாக இருக்கும்.

சூரியன் இறங்கு முகமாக பயணிக்கும் கடைசி மாதம் மார்கழி, கடைசி நாள் போகி கொண்டாடினர்.